தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது. மூன்றாம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு விஸ்வரூப திபாராதனையும் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனை அடுத்து காலையில் சுவாமிக்கு உச்சிகால அபிஷேகமும் தீபாராதனையும் காட்டப்பட்டது. இதனை அடுத்து ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முருக பெருமானும் வள்ளி தெய்வானையும் வெள்ளி சக்கரத்தில் […]
