கந்தசஷ்டி திருவிழாவையொட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சாத்தான்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவானது கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆரம்பமாகியது. இதனை அடுத்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து விரதத்தை தொடங்கினர். குறிப்பாக கந்த சஷ்டி […]
