வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் தினேஷ்குமார் (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அவசர தேவைக்காக ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் தான் வாங்கிய பணத்திற்கு வட்டியை கட்டியதோடு கடனையும் முழுமையாக அடைத்துள்ளார். இருப்பினும் பணம் கொடுத்தவர்கள் பேராசையின் காரணமாக மேற்கொண்டு கந்துவட்டி தருமாறு தினேஷ்குமாரை தொடர்ந்து தொந்தரவு […]
