சென்னை கிண்டி அருகே இருக்கும் இரும்பு வழிகாட்டி பலகை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
