சூப்பர் மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கை வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 37 வயதான Ahamed Aathill Mohamed Samsudeen என்ற இலங்கையர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின் Samsudeen போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த ஏழு பேரில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். […]
