கத்தார் பிரதமருடன் வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 3 நாடுகளில் சுற்று பயணத்தில் இருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று முன்தினம் கத்தார் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகரான தோகா விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் அந்த நாட்டு பிரதமரும், உள்துறை மந்திரியுமான ஷேக் காலித் பின் கலிபா பின் அப்துல்அசிஸ் அல் தனியை சந்தித்துள்ளார். அப்பொழுது இரு தலைவர்களின் தலைமையில் பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. […]
