கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வடுகசாத்து கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் ஆரணி-வாழப்பந்தல் சாலையில் சென்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.6,000-ஐ பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து உதயகுமாரின் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]
