பொன்னியின் செல்வன் முதல்பாகம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் அப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டு பேசியதாவது, “இப்படத்தின் பிரமிப்பிலிருந்து வெளியேவந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள் என என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கியிருந்தேன். பொன்னியின் செல்வன் நாவலை வாசித்த ஒவ்வொரு வரும் ஆதித்யகரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழி வர்மன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், கற்பனை செய்து வைத்திருந்த முகங்கள் எங்களின் முகமாக மாறி […]
