ராமநாதபுரத்தில் பெற்றோருடன் சாலையில் சென்று கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது டிராக்டர் ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் செங்கல் காளவாசல் செயல்பட்டு வருகின்றது. இங்கு சிவகங்கை பகுதியிலிருந்து பல தொழிலார்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அதன்படி செங்கல் காலவாசலில் வேலை பார்த்து வரும் கார்த்திக் என்பவர் அவரது மனைவி ஜோதி மற்றும் மகள் பிரியங்காவுடன்(7) தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து […]
