நாமக்கல் மாவட்டத்தில் உடல்நலம் சரியில்லாததால் மனமுடைந்து முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமைபாட்டியை அடுத்துள்ள தேவராயன்பட்டியில் பரமசிவம்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி செல்லம்மாள். இந்நிலையில் பரமசிவம் உடல்நலக்குறைவால் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பெரும் மனமுடைந்து நிலையில் காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து செல்லம்மாள் நேற்று வெளிய சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த பரமசிவம் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் செல்லம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பரமசிவம் உயிரிழந்த […]
