கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. அதில் ஒன்றியக்குழு தலைவர் சசிகலா பொன்ராஜ் தலைமை தாங்கினார். இதனையடுத்து ஒன்றியக்குழு துணைத்தலைவர் உதயசூரியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகுமாரி, ரவிக்குமார், மேலாளர் பத்மினி போன்றோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர் சீனிவாசன் கூறியதாவது, தங்களுக்கு வழங்கப்படும் படி மிக குறைவாக இருப்பதனால் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
