குளிக்க சென்ற முதியவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள வடவயல் கிராமத்தில் ராமு என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வயல் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் ராமு வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து கண்மாய்க்கு சென்று தேடியதில் முதியவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் […]
