கோத்தகிரி அருகே மது போதையில் இருந்த நபர் ஒருவர் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்தது. எனவே கோத்தகிரியில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டி செல்லும் பயணிகள் ஏராளமானோர் பேருந்து வராததால் காத்துக் கொண்டிருந்தனர். அங்கு தனது குடும்பத்துடன் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தின் முன்பாக சென்று […]
