சந்தானம் நடிப்பில் சென்ற ஆண்டு பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி போன்ற திரைப்படங்கள் வெளியாகியது. மேலும் அண்மையில் “குலு குலு” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து சந்தானம் நாயகனாக நடிக்கும் அவரது 15-வது படமான “கிக்” திரைப்படத்தை லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் ஆகிய கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். தாராளபிரபு திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் தான்யாஹோப் இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பாக்யராஜ், […]
