12 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரப் படிமத்தை அருங்காட்சியத்தில் பத்திரமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பாக டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்மர படிமம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சுற்றுப்புற கிராமங்களில் டைனோசர் முட்டை படிமங்கள், நத்தை படிமங்கள், கிளிஞ்சல் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குன்னம் கிராமம் அருகில் ஆனைவாரி […]
