வேடசந்தூர் அருகே செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள காசி பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி முருகேஸ்வரி என்ற தம்பதியின் மகள் சுதா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சுதா அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதால் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை பெற்றோர்கள் சுதாவை கண்டித்துவிட்டு சுப்பிரமணி […]
