ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன போராட்டம் நடத்தினார்கள். வட்டார காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் யு.எ.ராமராஜ், மாவட்ட பொது செயலாளர் எஸ்.விவேகானந்தன், மாவட்ட பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் அம்மாபேட்டை நகர செயலாளர் அப்துல் அஜீஸ், […]
