Categories
உலக செய்திகள்

மியான்மர் ராணுவம் துப்பாக்கிச்சூடு… அப்பாவி மக்கள் பலி… அமெரிக்க அதிபர் கண்டனம்…!!

மியன்மார் ராணுவ வீரர்கள் மக்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மியன்மார் ஜனநாயக ஆட்சி முறையை கவிழ்த்து ராணுவ ஆட்சியை நடப்பதை எதிர்த்து அந்நாட்டிலுள்ள இரு பெரிய நகரங்களான யாங்கூன்  மற்றும் மண்டேலா போன்ற 40 இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்த நிலையில் அமைதியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறையை நடத்தி ராணுவ வீரர்கள் மக்களை குருவியை சுடுவதுபோல் துப்பாக்கியால்  சுட்டுத்தள்ளி உள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துக்கடா அரசியல்வாதி மாதிரி என்னை பார்த்தால் தெரியுதா?… வானதி சீனிவாசன் கடும் கண்டனம்…!!!

என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்வதா என்று மக்கள் நீதி மையம் கட்சியினருக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
உலக செய்திகள்

வடகொரியா ஏவுகணை சோதனை… மீண்டும் அதிரடி… ஜப்பான் மற்றும் அமெரிக்கா கடும் கண்டனம்…!!!

ஜப்பான் நாட்டில் வடகொரியா அத்துமீறி நடத்திய ஏவுகணை சோதனையே எதிர்த்து ஜப்பான் மற்றும் அமெரிக்கா வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே  கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றது. அதனால் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தங்கையும் அமெரிக்காவுக்கு எதிரான  கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் . இந்நிலையில் வடகொரியா, ஜப்பான் கடலில் தொலைதூரப் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. அதனால் […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை இது…!! நாடாளுமன்றத்தில் நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்கள்… இணையத்தில் பகிரும் ஆண் ஊழியர்கள்…!!

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாலியல் ரீதியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் அங்கு பணிபுரியும்  ஆண் ஊழியர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் ஒரு பெண் அரசாங்க ஆலோசகர் சக அரசு ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் சீண்டல் போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் அங்கு வேலை செய்யும் ஆண் ஊழியர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசு மருத்துவமனைக்குச் சென்றால் நரகத்தை பார்க்கலாம்”… சர்ச்சையை ஏற்படுத்திய கமல்ஹாசன்…!!!

அரசு மருத்துவமனைக்குச் சென்றால் நரகத்தை பார்க்கலாம் என கமல் கூறியுள்ளதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

தூதரக உறவை துண்டித்த வடகொரியா… கடும் கண்டனம் தெரிவிக்கும் மலேசியா… பரபரப்பு…!!!

இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவைத் துண்டிப்பதாக வடகொரியா அறிவித்ததற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மலேசியாவில்  முன் சோல் மியோங்  என்பவர் 10 ஆண்டுகள் மேலாக  வசித்துவருகிறார். இவர் வடகொரியா நாட்டை சேர்ந்தவர். அவரின் மீது  அமெரிக்கா பண மோசடியில்  வழக்குப்பதிவு  செய்துள்ளது. அதனால் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று  மலேசிய அரசுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது .  அந்த  கோரிக்கையை  ஏற்ற மலேசிய அரசு அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது. இதை பற்றி  […]

Categories
உலக செய்திகள்

நிம்மதியா தூங்கணுமா? வேணாம்மா?… அமெரிக்காவை கண்டித்த வடகொரியா அதிபரின் தங்கை… பரபரப்பு…!!!

வடகொரிய   அதிபரின் தங்கை   அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்த  சம்பவம்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.   உலக நாடுகளில் அமெரிக்கா வல்லரசு நாடாக திகழ்கிறது. அதனை போலவே  மிகவும் மர்மம் நிறைந்த நாடாக வட கொரியா உள்ளது. இந்ந இருநாடுகளுக்கும் , பல ஆண்டுகளாகவே பிரச்சினைகள் நிலவி வருகிறது .அதனால் இருநாடுகளும் எப்போது மோதிக் கொள்ளும் என்ற அச்சம் இருக்கும் . இந்நிலையில் வடகொரியா மற்றும் அமெரிக்கா நாடுகளின் கடற்படை கூட்டு பயிற்சி வரும் நாட்களில் நடைபெறயுள்ளாதால்  அமெரிக்க […]

Categories
இந்தியா தேசிய செய்திகள்

“விவசாயிகள் போராட்டம்”… ஆதாரமில்லாத கருத்துகளை முன் வைக்க வேண்டாம்… பிரிட்டனுக்கு இந்தியா கண்டனம்…!!

இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் மூன்று புதிய வேளாண் திட்டங்களை கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .  இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில், விவசாயிகளின் பாதுகாப்பு மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இயங்கி வரும் இந்திய தூதரகம் பிரிட்டனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

போராடும் ஊழியர்களுடன்…” பேச மறுப்பது ஏன்”..? மு க ஸ்டாலின் கண்டனம்..!!

மூன்றாவது நாளாக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆனால் முதல்வர் பழனிசாமி அவர்களை அழைத்துப் பேச மறுப்பு தெரிவித்து வருகிறார். என்று மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் 3-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வூதியர்களுக்கான பணப்பலன், 14 வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்த கோரிக்கைகளுடன் ஒன்பது தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைவாக இயக்கப்படுவதால் […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதில்…. பெட்ரோல்-டீசல் விலையை குறைங்க… ராமர் சந்தோஷப்படுவார் – கடும் கண்டனம்…!!

ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று சிவசேனாவின் சாம்னா பத்திரிகை கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கலின்போது செஸ் வரி என்ற வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்ந்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை கடும் உச்சத்தை தொட்டது. இதையடுத்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்குமாறு நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளும் […]

Categories
மாநில செய்திகள்

இனிமே இந்த தவறு நடக்க கூடாது… டிடிவி.தினகரன் கண்டனம்…!!!

தமிழகத்தில் சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் மற்றும் அவருடைய மனைவி வாசுகியை பிராமணர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து, தமிழர்களின் அறத்தின் அடையாளமாக இருக்கும் திருவள்ளுவரையும் பிராமணராக மத்திய பாஜக அரசு சித்தரித்துள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மு இந்நிலையில் எட்டாம் வகுப்பு ஹிந்தி […]

Categories
மாநில செய்திகள்

“திருத்துங்கள், இல்லையேல் திருத்துவோம்”… கவிஞர் வைரமுத்து ஆவேசம்…!!!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரித்துள்ளது பற்றி கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் மற்றும் அவருடைய மனைவி வாசுகியை பிராமணர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து, தமிழர்களின் அறத்தின் அடையாளமாக இருக்கும் திருவள்ளுவரையும் பிராமணராக மத்திய பாஜக அரசு சித்தரித்துள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மு இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

“ராக்கெட்” தாக்குதலுக்கு கண்டனம்… 5 உலக நாடுகள் சேர்ந்து எடுத்த முடிவு…பரபரப்பு தகவல்…!

ஈராக்கில் நடந்த ராக்கெட் தாக்குதலுக்கு 5 உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கடந்த 15 ஆம் தேதி இரவு 9.30 மணி அளவில் எர்பில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அமெரிக்க வீரர் உள்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு சரயா அவ்லியா அல் டம் என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழுவிற்கு ஈரானுடன் தொடர்பு இருப்பதாக சில ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஒரு அரசியலா?… மக்களை ஏமாற்ற நாடகம்… ஸ்டாலின் கண்டனம்…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரி அரசியல் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே… இது அரசின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்… கமல்ஹாசன் ஆவேசம்…!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உலகம் போற்றுபவரை இழிவாக பேசினால் விடமாட்டேன்”…. அமைச்சர் வேலுமணி காட்டம்…!!

உலகம் போற்றும் நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாக பேசினால் விடமாட்டேன் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தை குறித்து பாஜக நிர்வாகி பேசியதை எஸ் பி வேலுமணி கண்டித்தார். உலகம் போற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக பேசுவது என்பது தவறான விஷயம். மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒரு போதும் தமிழக அரசு பார்த்துக் கொண்டு இருக்காதே என்று அவர் எச்சரித்தார். மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தை குறித்து பாஜக நிர்வாகி பேசியதை அந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் உங்களை கொன்றாலும் ஆச்சர்யமில்லை… விளம்பரம் செய்ய பணம் எப்படி வந்தது…? அதிகாரிகளை வறுத்தெடுத்த நீதிபதிகள்…!!

மத்திய அரசின் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மக்கள் கொன்றாலும் அதில் ஆச்சர்யமில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது மத்திய அரசின் பொறுப்பில்லாத அரசியல்வாதிகள் மற்றும் அரசு மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களால் கொலை செய்யப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது யூனியன் பிரதேசமான டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுவருகிறது. இதனால் உருவான பொருளாதார நெருக்கடியினால் பல பணியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

11ஆம் தேதி முற்றுகை போராட்டம்… வைகோ கடும் கண்டனம்…!!!

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து 11ஆம் தேதி வைகோ தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதியில் மாணவர்கள் திரண்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட அந்த நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு… கமல் கடும் கண்டனம்…!!!

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதியில் மாணவர்கள் திரண்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட அந்த நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிராமசபை கூட்டங்களுக்கு தடை… அதிமுக போடும் தடைகளை உடைப்போம்… வைகோ கண்டனம்…!!!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களின்  மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருகிறது. அதனைக் கண்டு பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. ஊராட்சி சட்டவிதிகளை காரணமாக காட்டி, கிராம சபை கூட்டங்களுக்கு தடை போடும் எடப்பாடி பழனிசாமி அரசு, மத்திய அரசின் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

கேட்க ஐந்து ஆள் இல்லை… ஊத எதற்கு ஆறு முழ சங்கு?…!!!

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி தொகுப்பு வெளியிட அனுமதி அளித்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். பொதிகை தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அது சமஸ்கிருத செய்தித் தொகுப்பை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு வெங்கடேசன் என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, “கேட்க 5 ஆள் இல்லை, ஊத எதற்கு ஆறு முழ சங்கு?. பொதிகை தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 […]

Categories
தேசிய செய்திகள்

‘டெல்லி எல்லையில் விவசாயிகள், ஆனால் ஹைதராபாத்தில் பிரச்சாரம்’…அமித்ஷாவின் பொறுப்பற்ற நிலை… சவுரப் பரத்வாஜ் கண்டனம்..!!

போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன், மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடந்து வந்தது. இந்நிலையில் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கிடையே […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலைக்கு தூண்டிய தொலைக்காட்சி ஆசிரியர்… வீட்டில் நுழைந்த போலீஸ்… வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டப்பட்ட வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரிபப்ளிக் என்ற தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி என்பவரின் வீட்டில் மும்பை போலீசார் அதிரடியாக நுழைந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர். அவரை விசாரித்ததில், மும்பை காவல்துறை தனது மாமனார் மற்றும் மாமியார், மகன் மற்றும் மனைவி உடல் ரீதியாக தாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்கவும் கூடாது வெடிக்கவும் கூடாது… இது என்ன நியாயம்?… ராஜஸ்தான் அரசுக்கு ஸ்டாலின் கேள்வி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அரசு விதித்துள்ள தடையை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை திரும்பப் பெறக்கோரி அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் திமுக தலைவர் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், “கொரோனா பரவலை காரணம் கூறி பட்டாசு வெடிப்பதற்கு ராஜஸ்தான் அரசு தடை விதித்திருப்பது மிகுந்த வேதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு… இது மிகவும் ஆபத்து… மு.க.ஸ்டாலின் கண்டனம்…!!!

கொரோனா இரண்டாவது அலை வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறப்பது மிகவும் ஆபத்தானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நவம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “நவம்பர் மாதம் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு மக்களை ஏமாற்ற மட்டுமே தெரியும்… யோகி ஆதித்யநாத் அதிரடி பிரசாரம்…!!!

காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் மக்களை ஏமாற்றுவதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத் தேர்தல் 9 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற் கட்ட தேர்தல் சென்ற அக்டோபர் 28ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நவம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா […]

Categories
மாநில செய்திகள்

விண்ணை முட்டும் விலை ஏற்றம்… விவசாயிகளின் வாழ்வில் காரிருள்… பதில் சொல்லுமா அரசு?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

கேரளாவை போன்று காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் கூறியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள கருத்தில், “விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தை போன்ற காய்கறிகளை அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும். பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ஜாதி அரசியல் செய்யும் எடியூரப்பா… பலியாகும் மக்கள்… டி.கே.சிவகுமார் கண்டனம்…!!!

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா சாதி அரசியல் செய்து வருவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” ஆர்ஆர்நகர் தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் முனிரத்னா, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, பாரதிய ஜனதா சார்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் அனைத்தையும் பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது திரும்பப் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதாவின் சேர்ந்தால் முனி ரத்னா மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் […]

Categories
மாநில செய்திகள்

விபூதியை அவமதித்த ஸ்டாலின்…. அது டால்கம் பவுடர் இல்லை…. கண்டனம் தெரிவித்த மாநில துணைத்தலைவர்…!!

இந்துக்கள் புனிதமாக நினைக்கும் விபூதியை ஸ்டாலின் கீழே கொட்டியதால் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அங்கு அவருக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. தற்போது ஸ்டாலின் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது ஸ்டாலினுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை நெற்றியில் பூசாமல் கழுத்தில் தடவி கொண்டு மீதம் இருந்த விபூதியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம்…!!

தமிழக காவல்துறைக்கு பாரதிய ஜனதா  கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மருது சகோதரர்கள் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார்கோவில் செல்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த எல். முருகன் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றார். 50 சதவீத இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இல்லாத தடுப்பூசிக்கு வாக்குறுதிகளா – கமல்ஹாசன்

தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து அள்ளித் தெளிக்கும் வாக்குறுதி அல்ல என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். திரு. கமலஹாசன் டுவிட்டர் பதிவில் நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர் எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர் இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் என குறிப்பிட்டுள்ளார். ஐயா ஆட்சியாளர்களே தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து அள்ளித் தெளிக்கும் வாக்குறுதி அல்ல என கண்டனம் தெரிவித்துள்ள திரு. கமலஹாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்….. கொந்தளித்த பிரபல பாடகி…….

விஜய் சேதுபதியின்  மகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் பாலியல் மிரட்டல் விடுத்ததற்காக பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியை  நடிக்கபில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்திய  800 படத்தை உருவாக்க திட்டமிட்டனர். ஆனால் விஜய் சேதுபதி படத்திலிருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும் ,சினிமா பிரபலங்களும் என பலர் வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்பு அதிகரித்ததால் படத்திலிருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்திருந்தனர். இதனிடையே நடிகர் விஜய் […]

Categories
சினிமா

பிரபல நடிகரின் மகளுக்கு மிரட்டல்… ‘இதுதான் கோழைகளின் ஆயுதம்’… கண்டனம் தெரிவித்த கனிமொழி…!!!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பற்றி திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் பற்றி திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டு இருக்கும் வக்கிர மிரட்டல் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. அது மிகவும் ஆபத்து. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவது மட்டுமே கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இவ்வாறு வக்கீல் மிரட்டல் விடுத்துள்ள நபர் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை தவிர… வேறு என்ன செய்தது மோடி அரசு?… ராகுல் காந்தி கேள்வி…!!!

மோடி அரசு வேளாண் சட்டங்கள் மூலமாக விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்ற ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் பெருநிறுவனங்களுக்கு பயனளிக்கக் கூடிய விதத்தில் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன.அது மட்டுமன்றி அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசிற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.மேலும் காங்கிரஸ் கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

எதையும் கண்டிக்காத காங்கிரஸ் தலைவர்கள்… அனைத்துமே ஓட்டு வாங்கிய அரசியலுக்காகவே… மாயாவதி கண்டனம்…!!!

உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் நடந்துகொண்டிருக்கும் குற்றங்களை கண்டிக்காமல் காங்கிரஸ் கட்சி ஏன் மௌனம் காக்கிறது என்று மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உத்திரபிரதேச மாநிலத்தை போலவே,காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் ராஜஸ்தானில் அனைத்து வகையான குற்றங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்கு அப்பாவிகள் கொலை, தலித்துகள், பெண்கள் மீதான வன்முறை போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் அவமதிப்பு… அனைவருக்கும் ஏற்பட்ட தலைகுனிவு…மு.க.ஸ்டாலின் கண்டனம்…!!!

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்கு உரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமரியாதை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குரியது…!!

ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார். பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் சட்டப்படி தேர்வு செய்யப்பட்டவர்.தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைப்பது கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு கே.  பாலகிருஷ்ணன் தமிழக அரசு சார்பில் ஒரு தீண்டாமை வழக்கு கூட பதிய வில்லை என தெரிவித்துள்ளார்.

Categories
Uncategorized உலக செய்திகள்

இட்லி தான் உலகிலேயே சலிப்பான உணவு வகை – இட்லி பிரியர்கள் கண்டனம்…!!

உலகிலேயே இட்லிதான் சலிப்பான உணவு என பிரிட்டன் பேராசிரியரின் ட்விட்டர் பதிவிற்கு  பல்வேறு நாடுகளிலிருந்தும் இட்லி பிரியர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்று பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் டுவிட்டரில்  இந்தியாவின் தென் மாநிலங்களில் வசிக்கும் மக்களின் விருப்ப உணவான இட்லி தான் உலகிலேயே சலிப்பான உணவு வகை என பதிவிட்டார். இதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ட்விட்டரில் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் அச்சடித்த அச்சகத்திற்கு சீல்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் வசிக்கும் மக்களிடம் வரி மட்டும் பெற்றுக்கொண்டு கழிவுநீர், சாலை வசதி, மேம்பாலம் போன்றவற்றை செய்து தராமல் மாங்கா தோப்பு, ரெட்டி தோப்பு பகுதிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனையொட்டி ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் உள்ள இளவரசன் என்பவர் நடத்தி வரும் ஸ்வேதா பிரிண்டிங் […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க., எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து – ராகுல் காந்தி கடும் கண்டனம்…!!

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளையும், கலாச்சாரத்தையும் சொல்லிக்கொடுத்த வளர்த்தால் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்படும் என பாஜக எம்எல்ஏ கூறிய கருத்துக்கு திரு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில  பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க […]

Categories
தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பதவியில் இருந்து… விலகுங்கள்… இல்லைனா ஜனாதிபதி ஆட்சி… மாயாவதி கண்டனம்…!!!

உத்திரப்பிரதேச மாநில முதல்-மந்திரி பதவியிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி அம்மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் என்ற மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் விவசாயிகளை அவமதிக்கிறீர்கள்… பிரதமர் மோடி கண்டனம்…!!!

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் அனைவரும் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உத்தரகாண்டில் நடைபெற்ற கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தில் மிகப்பெரிய ஆறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் விவசாயிகளை அவமதித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூரை இழிவுபடுத்திய பா.ஜனாத எம்.பி… பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர்…!!!

பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது என்று கூறியுள்ள பாரதிய ஜனதா கட்சி எம்.பி கருத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த தேஜஸ்வி சூர்யா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளின் மையமாக பெங்களூரு திகழ்ந்து கொண்டிருக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தேஜஸ்வினி சூர்யா பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இந்தி தெரியாதா? கடன் கிடையாது” வங்கி மேலாளரை விரட்டியடிங்க… கண்டனம் தெரிவித்த ராமதாஸ்…!!

இந்தி தெரியாத காரணத்தால் கடன் வழங்க முடியாது என்று ஜெயம்கொண்டான் வங்கி மேலாளர் கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். டாக்டர் ராமதாஸ் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிக்கு ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவர் கடன் வாங்க வந்த பொழுது வட இந்தியாவை சேர்ந்த வங்கி மேலாளர் இந்தி தெரியவில்லை என்றால் கடன் கிடையாது என கூறியுள்ளார், இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வை கண்டு இனியும் நாம சும்மா இருக்க கூடாது”… ஆவேசமாக கூறிய பிரபல நடிகர்…!!

நீட் தேர்வை கண்டு இனியும் நாம் அமைதியாக இருக்கக் கூடாது என தமிழக மக்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு இந்த தேர்வை ரத்து செய்ய பலகட்சி அமைப்பினர் மற்றும் நடிகர்கள் அறிவுறுத்தியும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் நேற்று நீட்தேர்வு என்பதும் நடைபெற்று முடிந்தது. இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகர் சூர்யா தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் தியாகம் செய்த நாடு”… குரல் கொடுத்த சீனா… இந்தியா,அமெரிக்கா கண்டனம்…!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிரான இணைய வழி மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,  பாகிஸ்தானில் தீவிரவாதம் மறைமுக யுத்தத்திற்குப் பயன்படுத்தப்படுவதற்கும், எல்லைத் தாண்டிய தீவிரவாத்திற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மும்பைத்தாக்குதல், பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையே, பாகிஸ்தானுக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அமைதிக்குழு பெண் உறுப்பினர் மீது தாக்குதல்… அமெரிக்கா கடும் கண்டனம்…!!!

ஆப்கானிஸ்தான் அமைதி குழுவை சேர்ந்த பெண் உறுப்பினர் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா சாதகமாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் பலனாக கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமெரிக்க அரசு […]

Categories
உலக செய்திகள்

வான் தாக்குதல் நடத்திய துருக்கி… ராணுவ அதிகாரிகள் பலி… கண்டனம் தெரிவித்த ஈராக்…!!!

வான் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் பலியான சம்பவம் பற்றி துருக்கிக்கு எதிராக ஈராக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை குறி வைத்து துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் இருக்கின்ற தன்னாட்சி பெற்ற பிராந்தியமான குர்திஸ்தானில் சைடகன் நகரில் துருக்கி ராணுவம் நேற்று முன்தினம் வான் தாக்குதலை மேற்கொண்டது. அச்சமயத்தில் துருக்கி இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று ஈராக் எல்லைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அழகான ஓவியத்தின் மீது அடிக்கப்படும் சேர்” கண்டனம் தெரிவித்த பாரதிராஜா….!!

இயக்குனர் பாரதிராஜா சமூக ஊடகங்களில் நடிகர் விஜய், சூர்யா குறித்து அதிகரிக்கும் அவதூறு பேச்சுகளை கண்டு அதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை மீரா மிதுன் தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் தனது செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். அண்மையில் தமிழ்சினிமாவில் வாரிசு அரசியல் பெரிய அளவில் உள்ளது என நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் வாரிசு […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கைவைக்கும் பாகிஸ்தான்….. கண்டனம் தெரிவித்த மத்திய அரசு

பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை நிராகரித்த மத்திய அரசு அது பற்றிய கண்டனங்களை பதிவிட்டு வருகிறது. காஷ்மீர் மாநிலம் முழுவதையும், பஞ்சாப்பின் சில பகுதிகளையும் சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதனை வெளியிட்ட பிரதமர் இம்ரான் கான், இதற்கு தனது மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலுமாக நிராகரித்த மத்திய அரசு அது தொடர்பான கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறது. […]

Categories

Tech |