Categories
அரசியல்

“போற போக்குல குறை சொல்லக்கூடாது முதல்வரே”…  ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்…!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி போகிற போக்கில் குறை சொல்லக் கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் முதல்வரை விமர்சித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடக்கவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏமாற்றிய கம்யூனிஸ்ட் அரசு….! கடுப்பான தமிழக அரசு…. ஷாக் ஆன ஸ்டாலின் …!!

முல்லைப்பெரியாறு பேபி அணையில் மரங்களை அகற்றும் விவகாரத்தில் கேரளாவின் முரண்பட்ட நிலைப்பாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப்பெரியாறு பேபி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அதற்கு கீழ் பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறது. கேரள வனத் துறை சில நாட்களுக்கு முன்பு மரங்களை வெட்ட அனுமதி அளித்தது. இதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் முக. ஸ்டாலின் கடிதம் எழுதினார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிஜேபிக்கும் தகுதி இல்லை…! மோடிக்கும் தகுதி இல்லை…. வெகுண்டெழுந்த காங்கிரஸ் …!!

சோனியா காந்தி குடும்பத்தை பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி இல்லை என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 9ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற பிஜேபி தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிஜேபி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை மையமாக கொண்டு இயங்கவில்லை என்றும் சேவையையும், அர்ப்பணிப்பையும், மையமாகக்கொண்டு இயங்குவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சோனியா காந்தி குடும்பத்தினர் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை […]

Categories
உலக செய்திகள்

திடீரென நடத்தப்பட்ட தாக்குதல்…. 7 பேர் காயமடைந்த சோகம்…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

ஈராக் நாட்டின் பிரதமரான முஸ்தபா அல்கதிமை கொல்வதற்காக நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஈராக் நாட்டில் கடந்தாண்டு முதல் முஸ்தபா அல் கதிமி என்பவர் பிரதமர் பொறுப்பை வகிக்கிறார். இந்நிலையில் ஈராக் நாட்டின் பிரதமரான முஸ்தபா அல் கதிமியை கொல்லும் முயற்சியில் ஏதோ ஒரு போராளி குழுவினர்கள் அவரது இல்லத்தின் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு ஈராக் நாட்டின் பிரதமர் வீட்டில் நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலில் அங்கிருந்த […]

Categories
அரசியல்

இவர் சொல்றது… “முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி இருக்கு”… ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்…!!!

முல்லைப் பெரியாறு அணையை ஓபிஎஸ் ஆய்வு செய்தது இல்லை என்று துரைமுருகன் கூறியதற்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லை பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை, பார்வையில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011 முதல் 2021 வரையிலான பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில், 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளிலும், 2011, 2012 மற்றும் 2015 முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வாழ்த்து சொல்லல…! இது ஒரு நவீன தீண்டாமை… மத்திய அமைச்சர் விமர்சனம் …!!

முதல்வர் முக ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் இதை நவீன தீண்டாமை என தான் பார்ப்பதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் 12 அடி உயரம் கொண்ட 35 டன் எடை கொண்ட ஆதிசங்கரர் சிலையை அதனருகே நிறுவி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வை இராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் தொலைக்காட்சி வாயிலாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்முறையை தூண்டிவிடும் பாஜக – திருமா கடும் கண்டனம் …!!

திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக பாஜக அரசு கட்டவிழ்த்துவிட்டு உள்ளதாக விசிக. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் திருக்குறள் பற்றிய புரட்சி நூல் எனும் தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் எஸ்.ஆர் சற்குணம் மற்றும் விடுதலை கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கடந்த சில வாரங்களாக திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முகமது ஷமி நீ பாகிஸ்தானுக்கே போயிடு… வன்மத்தை வீசிய ரசிகர்கள் …!!

டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில், வேக பந்துவீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்று நோக்கியிருந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் […]

Categories
அரசியல்

சின்னமா காலில் விழுந்து…. அழைத்ததை மறந்தாச்சா…. ஜெயக்குமாரை பொளந்து கட்டிய புகழேந்தி …!!

புரட்சித் தாய் சின்னம்மாவின் காலில் விழுந்து அழைத்ததை மறந்து விட்டு ஜெயக்குமார் பேசுவதாக அஇஅதிமுக முன்னாள் நிர்வாகி திரு புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு முரணாக பேசுவதற்கு கேபி.முனுசாமி க்கு எந்த அருகதையும் இல்லை என்றும் அவர் அப்போது தெரிவித்துள்ளார். அன்று எல்லோரும் வாக்களித்துதான் பொதுச்செயலாளராக விகே. சசிகலாவை தேர்ந்தெடுத்தோம். காலில் விழுந்து அழைத்தோம். அதை மறந்து விட்டு மறுபடியும் அதே கதையை பேசுகிறார். இன்னொருவர் இறந்து விடுவதாக கூறுகிறார். அவர் யார் என்றால்? […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் ஜனவரியில்…. கல்வியாளர்கள் அதிர்ச்சி தகவல்….!!!!

ஆசிரியர் தேர்வுக்கு அரசு கொண்டு வந்துள்ள வயது வரம்பில் அடுத்த வருடம் பல லட்சம் பட்டதாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அண்மையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு முதல் முறையாக வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அவை பொதுப் பிரிவினருக்கு 40 வயதும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 வயதும் என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த 40 வயதை கடந்த முதுகலை பட்டதாரிகள் வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

மதக்கோவில்கள் மீது தொடரும் தாக்குதல்கள்…. பாதிக்கப்படும் சிறுபான்மையினர்…. கண்டனம் தெரிவித்த அமெரிக்க அரசு….!!

மதக்கோவில்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையின மக்களாக உள்ளனர். அங்கு அண்மை காலமாகவே அவர்கள் மீது தாக்குதல்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன. மேலும்  கடந்த 13 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பரவிய பொய்யான செய்தியின் காரணமாக குலாமி என்ற இடத்தில் நடந்து கொண்டிருந்த துர்கா பூஜையில் வன்முறை வெடித்தது. இதனை அடுத்து இந்துக்கள் மற்றும் அவர்களின் வீடுகள், கோவில்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. […]

Categories
தேசிய செய்திகள்

“அவர் ஒன்றும் கண்காட்சி பொருளல்ல”… மத்திய அமைச்சரின் செயலால்… கொந்தளித்த மன்மோகன் சிங் மகள்…!!!

மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டதற்கு அவர் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்து வந்துள்ளார். கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நிலை சோர்வால் அவதியுற்று வந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மன்மோகன்சிங்கை மரியாதை நிமித்தமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாதவியா நேரில் சந்தித்து வந்தார். இதனைத் […]

Categories
அரசியல்

இந்த கொடுமை பாஜக அரசின் மூர்க்கம் – உ.பி நிகழ்வுக்கு கமல் கண்டனம்

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வன்முறைக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனவே இச்சம்பவம் பற்றி மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, நேற்று உத்திரபிரதேசத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வானது மிகவும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்…. சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம்…!!!!

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த தமிழ் பட்டியலின எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. மேலும் மஹாஸ்வேதா தேவியின் திரௌபதி, பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. இது குறித்து சரியான விளக்கம் பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து தெரிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே தேர்வுக்குழு ஆலோசனைக்குப் பிறகு பல்கலைக்கழகம் நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் […]

Categories
அரசியல்

விற்பனைக்கு வந்துள்ளது இந்தியா..! – ராகுல்காந்தி…!!

மத்திய அரசு இந்தியாவை விற்பனை பொருளாக்கி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் வழித்தடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் தனியார் மயமாக்குவதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவை விற்பனை பொருளாக்கி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது…. ஜெ.பி.நட்டா கண்டனம் ….!!!!

மத்திய அமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் மும்பையில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடத்தினார். அந்த யாத்திரையின்போது கொரோனா மீறியதாகக் கூறி 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், பங்கேற்று பேசிய மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான நாராயண் ரானே, “எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என முதல்வருக்கு தெரியாதது அவமானமாக உள்ளது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், அவரை கடுமையாக அறைந்திருப்பேன்.” என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் […]

Categories
மாநில செய்திகள்

சுங்கக்கட்டணம் உயர்வு…. மக்களின் ரத்தத்தை குடிக்கும் கொடுஞ்செயல்…. சீமான் கண்டனம்….!!!!

தமிழகத்தில் 14 சுங்கச்சாவடிகளில் 8% வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தேசிய நெடுஞ்சாலைத்துறை கைவிடாத பட்சத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் எரிபொருள், எரி காற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்…. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜூயர் கடு கடு…!!!

தமிழகத்தில்  கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்து அதற்கான பணி நியமன ஆணையும் வழங்கினார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்திற்கு திமுகவிற்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜூயர் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவில்களில் ஆகம விதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்…. ஜோதிமணி எம்பி கண்டனம்…..!!!

ஐபிஎஸ் மற்றும் மத்திய படை பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடைய அறிவியில், சைபர் பிரிவு உள்ளிட்ட பரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து “மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய படை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன மூடத்தனமான பேச்சு இது….? மீரா மிதுன் மீது எம்,எஸ்.பாஸ்கர் கண்டனம்….!!!

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நடிகை மீரா மிதுன் அண்மையில் தமிழ் சினிமாவில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசினார். மேலும் பட்டியலின வகுப்பை சேர்ந்த இயக்குனர்களை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டார். அதில் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களை திரைத்துறையை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

ஹாட்ரிக் அடித்தாலும் ஜாதியின் பெயரால் அவமானம் தான்…. கண்டனம்…..!!!!

ஜப்பான் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது. இந்நிலையில் அதில் இடம்பெற்றிருந்த உத்தரகாண்ட் ஹரித்வார் கிராமத்தை சேர்ந்த வீராங்கனை வந்தனா கத்தாரியாவின் வீட்டின் முன் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த இருவர் பட்டாசு வெடித்து தோல்வியை கொண்டாடியுள்ளனர். மேலும் அவரது குடும்பத்தையும் இழிவு செய்து,தலித்துகள் அணியில் இருப்பதால் தோற்றதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வந்தனா […]

Categories
மாநில செய்திகள்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு…. ஓபிஎஸ் கண்டனம்….!!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கு பின்னர் இதுகுறித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ ரெய்டு மூலமாக அச்சுறுத்தினால் அதனையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது. இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும். மேலும், இதுகுறித்த சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அதிமுக தயாராகவே உள்ளது. எந்தவொரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் அரசியலில் அபாயகரமான சூழலினை உருவாக்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு ரெய்டு நடத்துவது கண்டனத்திற்குரியது” என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் கொடியை கட்டி செல்வதை ஏற்க முடியாது…. ஜெயக்குமார் கண்டனம்…..!!!!

அதிமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் அவைத்தலைவருமான மதுசூதனன் மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் அவர் மருத்துவமனைக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக கொடியை கட்டி சசிகலா […]

Categories
தேசிய செய்திகள்

புவியியல் ரீதியாக தமிழகத்தை அழிக்க பாஜக துடிக்கிறது….ஜோதிமணி…!!!!

கொங்கு நாடு என்ற சொல்லாடலின் மூலம் புவியியல் ரீதியாக தமிழகத்தை பாஜக அழிக்க துடிக்கிறது  என்று ஜோதிமணி கூறியுள்ளார். மேலும் தொழில் வளர்ச்சியில் கோலோச்சிய கொங்கு மண்டலம், மோடியின் ஆட்சியில் ஜிஎஸ்டி,பணமதிப்பிழப்பு போன்ற திட்டத்தை கொண்டு வந்து ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டதை குறிப்பிட்ட அவர், பாஜக இந்தியாவின் பல இனங்களை அழிக்க துடிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழை ஒழித்துக்கட்டும் கேந்திர வித்யாலயா பள்ளி எதற்கு…? வைகோ கேள்வி…!!!

தமிழ்நாட்டில் தமிழை கற்பிக்காத கேந்திர வித்யாலயா எதற்கு? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: பாஜக அரசு இந்தியாவில் ஒற்றை ஆட்சியை நிலை நிறுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் சமஸ்கிருத மொழிக்கு உயிர் கொடுக்கும் இந்த திட்டம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது சமஸ்கிருத மொழியை பேசுகின்றனர். மீதமுள்ள 135 கோடி மக்களுக்கு இந்த மொழியை திணிப்பதற்கு அரசு முயற்சி செய்து […]

Categories
மாநில செய்திகள்

ஒளிப்பதிவு திருத்த சட்டம்…… சீமான் கண்டனம்…..!!!!

ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி சீமான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு முயற்சி என்று குறிப்பிட்ட அவர், ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்றும் உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். திரைத் துறையினருக்கு தனது முழு ஆதரவைத் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு… சீமான் கடும் கண்டனம்…!!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் அடுத்து தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்டோ, டாக்ஸி, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அன்றாட தேவைகளின் பொருள்கொள்ளும் அதிகரித்துள்ளது. லாரி, ஜேசிபி வாகனத்தின் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி உள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது…. தமிழக நிதியமைச்சர்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

வியாபாரி உயிரிழப்பு… முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும்… டிடிவி தினகரன் கருத்து…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன் சேலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி உறுதி அளித்த நல்ல நாட்கள் இவைதான்…. ஜோதிமணி…..!!!

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.   இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, காங்கிரஸ் ஆட்சியில் பெற்றோல் டீசல் விலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விலைவாசி உயர்வு…. பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்…..!!!

தமிழகம்  முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே […]

Categories
மாநில செய்திகள்

3 மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்….. சீமான்….!!!!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பட தெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சர்வதேசத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

அரியலூரில் ஹைட்ரோ கார்பன்…. திருமாவளவன் கண்டனம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பட தெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சர்வதேசத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

உயர்கல்வித்துறை… இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது… திருமாவளவன் கண்டனம்…!!!

2019-20 உயர்கல்வி ஆண்டறிக்கையில் ஆசிரியர்கள் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக உள்ளதாக திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உயர்கல்வித்துறை நிலவரம் குறித்த அறிக்கையை இந்திய ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றது. அதன்படி 2019- 2020 கான ஆண்டறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்களை பார்க்கும்பொழுது உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு மிக குறைவாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா”…. குஷ்பு கண்டனம்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

‘அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது!’…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தோனி ஆடிய இடம், பிடி உஷா ஓடிய தடம்…. சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்….!!!!

ரயில்வேக்கு சொந்தமான மைதானங்களை நில மேம்பாட்டு ஆணையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். தோனி, பிடி உஷா போன்றோர் ரயில்வே துறையில் வேலை செய்து தான் முன்னேறினார்கள் என்றும், ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற 21 பதக்கங்களின், 13 பதக்கங்களை வென்றவர்கள் ரயில்வேயில் வேலை செய்தவர்கள் என்று குறிப்பிட்டு, இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிமெண்ட் விலை அதிகரிப்பு…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அரசு அதிகாரிகளை பந்தாடும் தமிழக அரசு….. சீமான் கடும் கண்டனம்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் அரசு துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவ்வகையில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. நேற்று 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவு விவகாரம்… பினராய் விஜயன் கண்டனம்…!!

லட்சத்தீவு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பினராய் விஜயன் கண்டனம் ஒன்றை தெரிவித்துள்ளார். மக்கள், எழுத்தாளர்கள் பிரபலங்கள் என லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.  கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள், முதல்வர் என பலரும் லட்சத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் மத்திய அரசு புதிய விதமான சட்டங்களை பிறப்பித்தது அங்கு வாழும் மக்களுக்கு மிகப் பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்காக […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர் மீது வெறுப்பினை காட்டுகிறார்கள்..! ஜெர்மனியில் நடந்த சம்பவம்… பிரபல நாடு கடும் கண்டனம்..!!

ஜெர்மனியில் இனரீதியாக தன் நாட்டவர் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டத்தற்காக துருக்கி கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளது. ஜெர்மனியில் கடந்த 16-ம் தேதி பிராங்க்பர்ட்டில் துருக்கி நாட்டவர் ஒருவர் காவல்துறையினரால் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் துருக்கியின் ஆளும் கட்சி செய்தி தொடர்பாளர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அது ஒரு இன ரீதியான தாக்குதல் என்றும் விமர்சனம் செய்துள்ளார். AKP கட்சியின் செய்தி தொடர்பாளரான ஒமர் செலீக் அந்தத் தாக்குதலில் சட்ட ஒழுங்கு பிரச்சினை […]

Categories
இந்திய சினிமா சினிமா

வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் போட்டோ ஷூட்…. நடிகையின் செயலுக்கு ரசிகர்கள் கண்டனம்….!!!

புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கிடையில் பிரபல நடிகை எடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடிய டவ் தே புயல் அப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தக் கோர புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையில் பிரபல நடிகை ஒருவர் புகைப்படம் எடுத்திருப்பதை ரசிகர்கள் பலரும் கண்டித்துள்ளனர். ஹிந்தி நடிகை தீபிகா சிங் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் சமூக […]

Categories
மாநில செய்திகள்

மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு காட்டுகிறது… ஸ்டாலின் கண்டனம்…!!

மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு காட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசின் கல்வி உரிமைகளைப் பறித்து ஏற்றத்தாழ்வு உண்டாகும் புதிய கல்வி கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியீடு பதிலையே மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாற்றான் தாய் மனப்போக்கை வெளிப்படுத்திய மத்திய பாஜக அரசைக் கண்டிப்பதுடன், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் திமுக உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

Shocking: மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை… நீதிபதிகள் கண்டனம்..!!

மனித உயிர்கள் ஒரு பொருட்டே இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக மத்திய அரசை சாடியுள்ளனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒருபுறம் இருக்க பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஆக்ஸிஜனை […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி விலை…. மேலும் உயர்த்தப்படும் ஆபத்து…!!

தடுப்பூசி விலையை இரு மடங்கு உயர்த்தியதற்காக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கோவிஷில்டு கொரோனா தடுப்பூசி விலையை இரு மடங்கு உயர்த்தியதற்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய […]

Categories
மாநில செய்திகள்

இப்படிப்பட்ட சூழ்நிலையில்… நீட் தேர்வு அவசியமா…? மு.க.ஸ்டாலின் கேள்வி…!!

கொரோனா தொற்றின் இரண்டாவது ஆலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நீட் தேர்வு நடத்துவது சரியா? என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி கூடுதலாக வேண்டும் என்று கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இதுக்கு போய் இப்படியா துன்புறுத்துவது?… அதிர்ச்சி வீடியோ… ராகுல் காந்தி கண்டனம்…!!!

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களை இப்படி செய்தால் மக்கள் யாரிடம் உதவி கேட்பார்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்  பிறகு […]

Categories
உலக செய்திகள்

வவ்வால் மூலம் பரவிய கொரோனா… ஆய்வில் வெளியான தகவல்… உலக நாடுகள் கண்டனம்…!!!

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவில்லை வவ்வாலிருந்து  பரவியது என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடர் போராட்டம்… 510 பேர் பலி …சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா கடும் கண்டனம்…!!!

மியான்மரில் ராணுவப் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் என 510 பேர் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. மியான்மரில் ஜனநாயக ஆட்சி முறையில் முறைகேடு நடந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் கடந்த 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. அதனால் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டில உள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ராணுவம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் போராட்டம்… மக்களை சுட்டு குவிக்கும் ராணுவம்… சர்வதேச நாடுகள் கண்டனம்…!!!

மியான்மரில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதற்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மியான்மரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அதனால் இந்தப் போராட்டத்தை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் அடக்கு முறையை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை எல்லாம் மக்கள் பொருட்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனால் ராணுவத்தினரால் பல […]

Categories

Tech |