Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமரின் கட்சியினர் 100 பேர் கைது…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கவிழ்ந்தது. இதனையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்துவிட்டதாகவும், உடனே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணி, பொதுக் கூட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டனர். அதன்படி இஸ்லாமாபாத் […]

Categories
அரசியல்

அரசின் அலட்சியமே காரணம்…. சீமான் கண்டனம்…!!!!!!

மதுரையில் கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் போது பணியாளர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மதுரையில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கிய 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்ததும்  அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அதில் ஒருவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்பது மேலும் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் […]

Categories
அரசியல்

ஸ்டாலினை விமர்சித்த ஓபிஎஸ்…. பதிலடி கொடுத்த திமுக அமைச்சர் தங்கம்தென்னரசு…!!!!!

ஓபிஎஸ்ஸுக்கு பதிலடி தரும்  வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை அதிமுகவில் முன்னிலைப்படுத்தி பிரபலப்படுத்தி கொள்ள அவர் எடுக்கும் இத்தகைய பகீரதப் பிரயத்தனங்கள் குறித்து எங்களுக்கு எதுவும் கவலை இல்லை. ஆனால் இன்றைக்கு இந்திய திரு நாட்டில் உள்ள முதலமைச்சர்களின் முதன்மையானவர் என பல்வேறு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் இந்திய அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் நோக்கர்களும் நம்முடைய முதலமைச்சரை போற்றுவதே கண்டு மனம் பொறுக்காமல் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற […]

Categories
அரசியல்

“இதெல்லாம் ரொம்ப தப்பு”…. இளையராஜாவை அவமதிப்பதா?…. ஜே.பி.நட்டா கடும் கண்டனம்….!!!!

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அம்பேதக்ருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்ட விவகாரத்தில் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது அறிக்கையில், “இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் அவரை விமர்சிப்பதா? உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? இதுதான் ஜனநாயகமா? பாஜகவினர் மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை கூறினால் அதனை எதிர்ப்பீர்களா? ஆதரவாக பேசவில்லை என்பதற்காக […]

Categories
உலகசெய்திகள்

இந்தியானா தக்காளி…. பாகிஸ்தான்னா இரத்தமா….? ஆப்கானிஸ்தான் கேள்வி…!!!!!

பாகிஸ்தானை புகலிடமாக கொண்டு, இந்தியாவிற்கு  எதிராக பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. அதேபோல், பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகள், ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் இருந்து செயல்பட்டு வருகிகின்றது. அவற்றில் தெக்ரி-இ-தலிபான் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் முக்கியமானவையாகும். இந்த அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துகிறது. மேலும் சில தினங்களுக்கு முன், ஆப்கான் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக,  ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஷெல்டன் மாவட்டத்தில் பாகிஸ்தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் காரணங்களுக்காக இளையராஜாவை அவமானப்படுத்துவதா….? ஜே.பி.நட்டா கண்டனம்….!!!!

இளையராஜாவுக்கு, எதிரான விமர்சனங்களுக்கு பாரத ஜனதா தேசிய தலைவர் ஜேபி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், இசையமைப்பாளர் இளையராஜா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இளையராஜாவின் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்பதால் ஒரு இசை மாமேதையை இப்படி தாக்குவதா? என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசியல் காரணங்களுக்காக இளையராஜா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தந்தால்…. கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும்… சீமான்….!!!

ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று அமித்ஷா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி ஏ.ஆர்.ரகுமானின் லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு பேசுபொருளாகியுள்ளது. “இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசன் பாடலை பதிவிட்டவர், இந்தித் திணிப்புக்கு எதிராக தன்னுடைய குரலை கொடுக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் […]

Categories
அரசியல்

உதவி செய்பவர்களை இலங்கை அவமதிக்கிறது….. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!

இலங்கைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை பிணையில் விடுவிக்க தலா ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “சிங்களக் கடற்படையினரால் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை பிணையில் விடுவிக்க, அவர்கள் தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை […]

Categories
மாநில செய்திகள்

தணிக்கைத் துறைகளை தனியாருக்குத் தாரை வாா்க்க தி.மு.க அரசு முயற்சி… ஓபிஎஸ் கண்டனம்……!!!!!

அரசு தணிக்கைத்துறைகளை தனியாருக்குத் தாரை வாா்க்க தி.மு.க அரசு முயற்சி செய்வதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், சென்ற 2021 ஜூலை 21ல் பேரவையில் படிக்கப்பட்ட ஆளுநா் உரையில் தணிக்கை, கண்காணிப்பு செயல்பாடுகள் போன்றவை முழுவதுமாக சீா்செய்யப்பட வேண்டுமென்று அரசு கருதுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் அடிப்படையில், மாநில அரசின் தற்போதைய அனைத்து தணிக்கைத் துறைகளையும் மேற்பாா்வையிட மாநில தணிக்கை இயக்குநா் எனும் பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியைத் திணித்து, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா? …. சீமான் கண்டனம்….!!!!

இந்தியைத் திணித்து இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயல்வதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், ”ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில் அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மொழி திணிப்பில் தமிழகத்திற்கு விருப்பமில்லை…. பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி….!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மொழி தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்றால் நாட்டின் பழமையான மொழியான தமிழுக்கு மட்டும் தான் அந்த தகுதி உள்ளது. ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இது இந்தியாவுக்கு வேட்டு வைக்கும் செயல்”…. அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!!!

இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமித்ஷாவின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில், இந்தி மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக மீது திட்டமிட்டு பழி”…. முதல்வர் ஸ்டாலினை வன்மையாக கண்டித்த ஈபிஎஸ்….!!!!

தமிழகத்தில் வன்னியர் சமுதாய இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக மீது திட்டமிட்டு பழி சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை அதிமுக முறையாக நிறைவேற்றவில்லை என்ற முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியது முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சி நீடித்திருந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார். திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களின் பணத்தை திருடும் மத்திய அரசு…. 2014- க்கும் 2022- க்கும் இடைப்பட்ட வித்தியாசம்….. பட்டியலிட்ட ராகுல்காந்தி….!!!!

இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், தற்போது இருக்கும் பாஜக ஆட்சி காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இருந்த வேறுபாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வெளியேறியது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் எரிபொருள்களை நிரப்ப 714 ரூபாய் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் தற்போது அது 1,038 ரூபாயாக அதிகரித்துள்ளது. அப்போது காரின் எரிபொருள்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு…. சீமான் கண்டனம்….!!!!

நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனுடன் சேர்த்து சமையல் சிலிண்டர் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சுங்கக்கட்டணம் உயர்வு…. பெரும் துயரத்திற்கு ஆளாகும் மக்கள்…. வைகோ கடும் கண்டனம்….!!!!!

நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை திடீரென அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 60 கிலோ மீட்டருக்கு குறைவான இடைவெளியில் செயல்படக்கூடிய சுங்கச்சாவடிகளை சட்டங்களுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயரும் […]

Categories
சினிமா

ஆஸ்கர் விருது விழா… “வில் ஸ்மித்துக்கு எழுந்துவரும் கண்டனம்”…. விருது பறிக்கப்படுமா…????

ஆஸ்கர் மேடையில் கிரிஸ் ராக்கை வில் ஸ்மித் தாக்கியதற்காக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 94 வது ஆஸ்கர் விருது விழாவில் கிங் ரிச்சர்ட் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வில் ஸ்மித்துக்கு விருது வழங்கப்பட்டது. வில் ஸ்மித்தின் மனைவியை தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டலடித்ததற்கு வில் ஸ்மித் அவரை தாக்கியுள்ளார். இதற்கு ஆஸ்கர் அகாடமி கண்டனம் தெரிவித்து வருகின்றது. இந்நிகழ்வால் வில் ஸ்மித்துக்கு பலவகையில் எதிர்ப்புக்கள் எழுந்து வருகின்றநிலையில் ஆஸ்கர் அகாடமி விதிப்படி அவரின் விருதை […]

Categories
அரசியல்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு…!! விஜயகாந்த் கடும் கண்டனம்…!!

தமிழகத்தில் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூபாய் 102 ஆகவும், .டீசல் விலை 70 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 92 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் எரிவாயு சிலிண்டர் விலை 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் […]

Categories
அரசியல்

மாற்றுத்திறனாளிகள் கைது: ” மனசாட்சி இன்றி செயல்படும் திமுக….!!” டிடிவி காட்டம்…!!

உதவித்தொகையை உயர்த்தி கேட்டு போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “உதவித்தொகையை உயர்த்தி கேட்டு போராட்டம் நடத்துவதற்காக சென்னை வந்த மாற்றுத்திறனாளிகள் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுகவின் இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியது. […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் சரி இல்லை…. ரஷ்யாவின் செயலுக்கு…. ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு கண்டனம்….!!!

உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது  சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.   உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.நா குழந்தைகள் நிதியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா பொது மக்கள் நிதியத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

இதற்க்கு நிச்சயம் பதிலளிக்கனும்…. கடத்தப்பட்ட மேயர்கள்… கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம்…!!!!!

ரஷ்யப் படைகள் கடத்தி வைத்துள்ள இரண்டு மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ரஷ்ய படைகள் கடத்தி வைத்துள்ள மேலிடோ போல் மற்றும் னிபிரோருடேனி  நகர மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலிடோ போல் நகர மேயரை ரஷியப் படைகள் கடத்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்த நிலையில், தற்போது னிபிரோருடேனி  நகர மேயரும் கடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.இருமேயர்கள் கடத்தப்பட்டதற்கு  கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: இது எந்த விதத்தில் நியாயம்?…. கர்நாடகா அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்…..!!!!!!

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது என்று தெரிவித்துள்ளார். அதாவது மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கியது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது. ஆகவே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமல் மேகதாதுவில் ஒரு பெரிய […]

Categories
அரசியல்

“இதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை…!!” சித்தராமையாவின் பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்….!!

கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையே பாயும் நதியான காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக எந்த மாநில அரசாங்கம் முடிவெடுத்தாலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 4 மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்பது விதி. இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் குறுக்கே அணைகட்ட முடிவு செய்துள்ளதாகவும் இதில் தலையிடுவதற்கு தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். சித்தராமையாவின் இந்த கருத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஏழு ஏவுகணை சோதனை ஒரே மாதத்தில் நடத்த வடகொரியா…. பல நாடுகள் கண்டனம்….

ஒரே மாதத்தில் ஏழு ஏவுகணை  சோதனை நடத்திய வடகொரியாவுக்கு    அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த அதிவேக ஏவுகணை சோதனையை வடகொரியா நாடானது 2022ஆம் ஆண்டு தொடங்கி ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் ,தென்கொரியா போன்ற நாடுகள் கண்டனம்  தெரிவித்தாலும் இம்மாதத்தில் ஏழு ஏவுகணை  சோதனையை  வடகொரியா நடத்தியுள்ளது.

Categories
அரசியல்

தமிழ்த்தாய் மன்னிப்பாள்!…. சட்டம் மன்னிக்குமா?…. வைரமுத்து கடும் கண்டனம்….!!!!

நேற்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து […]

Categories
அரசியல்

அதிகாரிகளே இப்படியா செய்யுறது?…. இதை ஏத்துக்கவே முடியாது!…. டிடிவி கடும் கண்டனம்….!!!!

நேற்று குடியரசு தின விழாவின் நிறைவாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதிலளித்துள்ளனர். இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசு “தமிழ்த்தாய் வாழ்த்து […]

Categories
அரசியல்

“வரலாறு மறந்துருச்சா….? இல்ல வரலாற்ற மாத்த முயற்சி செய்றீங்களா”….! திமுகவை சாடிய ஓபிஎஸ்….!!!

எம்ஜிஆர் பிறந்த நாளன்று திமுகவினர் பேசியதை ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். எம்ஜிஆர் பிறந்த நாளன்று திமுக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “திமுக அரசுக்கு வரலாறு மறந்து விட்டதா..? அல்லது வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்களா..! என தெரியவில்லை. வரலாறு படைத்தவர்களுக்கு மத்தியிலேயே அவர்கள் இவ்வாறு பேசுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பிறந்த நாளில் திமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]

Categories
அரசியல்

“இதெல்லாம் இவங்க மட்டும் தா செய்வாங்க”…. இது ஒரு பயங்கரவாதம்…. எரிமலையாக வெடித்த சீமான்…!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பாஜக மிரட்டல் விடுத்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் டிவியில் சிறுவர்கள் இருவர், மன்னர் மற்றும் அமைச்சர் வேடமிட்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். இது தற்போது நடைபெற்றுவரும் ஆட்சி குறித்து பேசுவது போல் இருந்தது. இதனால் ஜீ தமிழ் டிவி மீது அடக்குமுறைகள் திணிக்கப்படுவதாக நாம் தமிழர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ஒரு பிரபலமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைரல் வீடியோ : பிரதமரை கலாய்த்த குட்டீஸ்…. செம டென்ஷனில் பாஜக…. பரபரப்பு….!!!!

கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது முதல் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் வரை மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் பலவும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி ரியாலிட்டி ஷோவில் சின்ன குழந்தைகள் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மறைமுகமாக கலாய்த்து விமர்சித்துள்ளனர். https://twitter.com/DrSenthil_MDRD/status/1482420806214770689?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1482420806214770689%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Fstate-news%2Ftamilnadu-television-reality-show-criticised-pm-modi%2Farticleshow%2F88937402.cms இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி […]

Categories
அரசியல்

“அங்கேயெல்லாம் எதுக்கு சோதனை செய்றீங்க”…? கடுப்பான பார் கவுன்சில்…. டிஜிபிக்கு பறந்த கடிதம்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை செய்ததற்கு பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் மூடல்…. டிடிவி தினகரன் கண்டனம்….!!

தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓராண்டு அடிப்படையில் தற்காலிகமான அமைப்பாகத்தான் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் செவிலியர் இல்லாமல் செயல்படாமலேயே இருந்தது என விளக்கம் அளித்துள்ளார். இதற்கு டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அம்மா பெயரில் உள்ள திட்டங்களை மூடுவதிலேயே திமுக அரசு குறியாக இருப்பது தவறானது. அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவின் குசும்புத்தனம்…. அருணாச்சலப் பிரதேச ஊர்களின் பெயர் மாற்றம்…. இந்தியா கடும் கண்டனம்….!!!!

அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. அந்தப் பகுதியை தனக்கு சொந்தமானது என்று கூறியுள்ளது சீனா. அதுமட்டுமல்லாமல் எல்லைப் பகுதியில் சில இடங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஊர் பெயர்களை இஸ்டத்திற்கு மாற்றிக் கொண்டு வருகிறது. இதுபோல பெயர் மாற்றும் வேலைகளை கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து சீனா செய்து வருகிறது. சீனாவின் இந்த செயலிற்கு இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. இது குறித்து மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா”….?  மதுரை ஐகோர்ட்டு கண்டனம்…..!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் கிருமிநாசினி அளித்ததற்கு மதுரை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சமீபத்தில் 68 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை ஹைகோர்ட் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது மனிதாபிமானம் இல்லாத செயல். கைது செய்த […]

Categories
மாநில செய்திகள்

மனித நேயமற்ற செயல்…. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கிருமிநாசினி தெளித்தது மனித உரிமை மீறல் என தேசிய மீனவர் பேரவை கண்டனம் தெரிவித்து வந்தனர். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 68 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு, எழுவைதீவு உள்ளிட்ட கடற்பகுதியில் வைத்து மீனவர்களை கைது செய்து விசாரணைக்காக மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் மற்றும், தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மீனவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

முதுகலை மருத்துவ கலந்தாய்வு…. ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்…!!!

காவல்துறையினர் தங்கள் மீது தடியடி நடத்தியதாகவும், துன்புறுத்தியதாகவும், அவமரியாதையுடன் நடத்தியதாகவும், மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு 2020-ஆம் ஆண்டு நடக்க இருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் வந்த நிலையிலும், கவுன்சிலிங் இன்னும் நடத்த படாமலும், இடங்கள் ஒதுக்கப்படாமலும் இருக்கிறது. எனவே மருத்துவப் படிப்புக்கான அட்மிஷன் தாமதம் ஆவதாகவும் மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதி ஸ்டாலினை வச்சு செஞ்ச டிடிவி”…. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது…..!!!

கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பாக டிடிவி தினகரன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அணியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். இதனால் பலரும் பெரிய பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு இதற்கு அனுமதி இல்லை…. பிரதமர் சர்ச்சைக்குரிய பேச்சு…. பல தரப்பினர் கண்டனம்…..!!!!

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியபோது, ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கிளப்பிவிட்டார். பெண்கள் கல்வி பயில அனுமதிக்காமல் இருப்பது ஆப்கானிய கலாச்சாரம் என்று அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் குறித்து தவறான கருத்துகளை கூறியதாக அவர் மீது கண்டனங்கள் கிளம்பியுள்ளன. அந்த மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் அவரது இந்த கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத […]

Categories
உலக செய்திகள்

இந்து கோவில் சிலைகள் உடைப்பு…. மர்ம நபர் கைது…. பாகிஸ்தானுக்கு கண்டனம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இந்து கடவுள் சிலையை உடைத்துள்ளனர். பாகிஸ்தானில் கராச்சி நகரில் இந்து கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோவிலில் ஜோக் மாயா என்ற பெண் கடவுளின் சிலை உள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் சுத்தியலுடன் நுழைந்துள்ளார். அவர் சிலையை அடித்து உடைத்ததுடன் கோவிலையும் சூறையாடி உள்ளார். இந்த சம்பவம் அறிந்த அந்தப் பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய துடிப்பதா…..?  இபிஎஸ் கண்டனம்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யத் துடிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் […]

Categories
உலக செய்திகள்

சீன பொருட்களுக்கு இனி…. பிரபல நாட்டில் தடை…. எச்சரிக்கை விடுக்கும் சீனா….!!!!

சீனாவின் மேற்குப் பிராந்தியத்தில் குறிப்பாக ஜின்ஜியாங்கில் வசிக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் குறிப்பாக உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா அடக்குமுறை, மத துஷ்பிரயோகம் செய்வதாக அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் இந்த மக்களை வலுக்கட்டாயமாக ஊழியர்களாக பயன்படுத்தி இந்த மாகாணத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும் புதிய சட்டம் அமெரிக்க செனட் சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல்…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!

மாணவர் மீது ஆசிரியர் தாக்குதலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கோவை கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளியில் சீருடை வழங்கப்பட்டது. அதை அணிந்து பார்த்த போது பெரியதாக இருந்தது. இதனால் தனது தாயிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார். பின்னர் வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை…. என்ன செய்கிறது உள்துறை?…. ராகுல் காந்தி கண்டனம்….!!!!

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.   நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், நாட்டில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறையினர் ஒருவரும் பலியாகியுள்ளார். இந்த சம்பவத்தினால் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் […]

Categories
அரசியல்

ட்ராமா கம்பெனி நடத்தி மக்கள் மனதில் இடம் பிடித்த திமுக…. அண்ணாமலை கடும் விமர்சனம்….!!!!

திமுகவினர் ஆரம்ப காலத்தில் ட்ராமா கம்பெனி நடத்தி தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்ததை போல, தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு அதையே செய்கிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாக செய்யப்படவில்லை எனவும், ஆதாரமின்றி அதிமுக முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், தொடர்புடைய […]

Categories
தேசிய செய்திகள்

பெரியவர்கள் வீட்டில்…. குழந்தைகளுக்கு மட்டும் பள்ளியா? உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்….!!!!

பெரியவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ள போது, குழந்தைகள் மட்டும் பள்ளிகளுக்கு வர கட்டாயப் படுத்தப்படுவதா என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் டெல்லியில் பள்ளிகளை மீண்டும் திறந்த கெஜ்ரிவால் அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் கடும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: காற்று மாசுபாடு…. டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்….!!!!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. வாகன புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை ஆகியவற்றால் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்கணிப்பு ஆராய்ச்சிக்கான அமைப்பை இதை நாள்தோறும் கண்காணித்து வருகிறது. இன்று காலையிலும் காற்றில் புகை மாசு அதிகமாக இருந்ததால் காற்று தரக்குறியீடு 316 என்கிற அளவில் இருந்தது. டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல் நாகரிகம் கொஞ்சம்கூட இல்லாம…. பொது இடத்தில் இப்படியா பேசுவது…. கே.பாலகிருஷ்ணன் கண்டனம்…!!!

தோழர் சு வெங்கடேசன் எம்பி குறித்து அமைச்சர் கே என் நேரு ஒருமையில் பேசி இருப்பது அரசியல் நாகரீகம் அற்றது என்று கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமைச்சர் கே என் நேரு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கே என் நேரு எதார்த்தமாக இயல்பாக பேசக்கூடியவர். வாய்க்கு வந்ததை சட்டென்று பேசிவிடுவார். அதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கலாக வந்துவிடும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சியை மாற்ற மறைமுக அழுத்தமா…? திமுக அரசை கண்டிக்கும் சீமான்…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை மாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து  அவற்றை பாதுகாக்க முனைப்போடு செயல்பட்டு வரும் நீலகிரி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மக்களின் நலனை புறந்தள்ளி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் அழுத்தம் கொடுப்பது நேர்மையான அதிகாரியை பந்தாடும் தமிழ்நாடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவினரின் செயலால் ஷாக்…! இதெல்லாம் வெக்கக்கேடானது…. பொங்கி எழுந்த சீமான் ..!!

அண்மையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ஆன்மீக நிகழ்வுகளை தமிழ்நாட்டில் உள்ள சில கோயில்களில் பாஜகவினர் திரையில் ஒளிபரப்பு செய்தனர். கட்சி சார்ந்த நிகழ்வுகளை அனைவருக்கும் பொதுவான ஆன்மீக தளங்களில் திரை இட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரகாண்டில் கேதார்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து உரையாற்றியதையும், தமிழகத்தில் உள்ள திருவரங்கம் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ராமேஸ்வரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்க கூடாது”… வைகோ ஆவேசம்… அதுக்கு இதுதான் காரணம்…!!!

இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்து விடக் கூடாது என்றும், அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஆட்சிமொழி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உள்துறை மந்திரி ‘அமித் ஷா இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழி, நான் என் தாய் மொழியை விட அதிகமாக இந்தியை நேசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார். அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பத்மஸ்ரீ விருதை வாங்குங்க… தேச துரோக வழக்கில் கைது செய்யுங்க… நடிகை கங்கனாவுக்கு எதிராக கண்டனம்!!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொடுத்த பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் எனவும், தேச துரோக வழக்கில் அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும், பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நாட்டின் சுதந்திரம் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அதற்கு கண்டனமும் வலுத்து வருகிறது. டிவி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு உண்மையிலேயே 2014-ஆம் ஆண்டு தான் சுதந்திரம் அடைந்தது. […]

Categories

Tech |