கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு ஆய்வாளர் மகேசன் காசிராஜன் காரைக்குடி பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க காரைக்குடி அரசு மருத்துவமனை மற்றும் அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் உள்ளன. அங்கு கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனை மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் வந்தார். […]
