கனியாமூர் பள்ளியில் 9,10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் பள்ளி முழுவதையும் சூறையாடினர். பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்துக்கும் தீ வைக்கப்பட்டது மேலும் பள்ளி கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டு, மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து […]
