அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணிகளுக்கு ஜனவரி2, 3 தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணிக்கு முதன் முறையாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 2(நாளை), 3ம்(நாளை மறுநாள்) தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்தப் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 742 பேர் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் […]
