பெண் ஒருவர் தன் கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், மோனிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். திருமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் ஆண்டிற்கு இரண்டு முறை சொந்த ஊருக்கு வந்து ஒரு மாதம் தங்கி இருந்து விட்டு […]
