குடும்பத்தகராறில் கணவன் என்றும் பாராமல் மனைவி கொத்திக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள கே.புதுப்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த சித்ரா சமயலறையில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை எடுத்து முருகன் மீது ஊற்றியுள்ளார். இதில் உடல் […]
