17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டு தற்கொலைக்கு தூண்டிய கணவன் மற்றும் மாமனாரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சித்தாளந்தர் பகுதியில் 21 வயது வாலிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு மூன்று மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுமி […]
