மயிலாடுதுறையில் குத்தாலம் அருகே வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் அருகே உள்ள ஆதம் நகரில் கணபதி (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், குமாரி என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தனது மனைவி குமாரி மற்றும் குழந்தைகளுடன் கணபதி வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு […]
