சென்னையில் பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாத காரணத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் ஜெய் கிருஷ்ணன் மற்றும் இந்துமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே கணவன் ஜெய் கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வந்துள்ளது.அதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.ஆனால் அவரின் மனைவி மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார். […]
