மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் நிலீஸ் ஹஜ் , நிர்மலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நிர்மலா தனது கணவருக்கு சோறு மற்றும் காய்கறி கூட்டு அடங்கிய உணவை பரிமாறி உள்ளார். அந்த உணவில் உப்பு சற்று அதிகமாக இருந்துள்ளது. உணவில் உப்பை அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன், மனைவி நிர்மலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பிறகு அங்கிருந்த ஒரு துணியை எடுத்து மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். […]
