சுவிட்சர்லாந்தில் பெண் ஒருவர் தன் கணவரை பல முறை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் மண்டலத்தில் இருக்கும் Zofingen என்ற பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தினரின் வீட்டில் கடந்த 2017 ஆம் வருடத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த பெண் தன் இரண்டு குழந்தைகளுடன் சிறிய காயங்கள்கூட இல்லாமல் தப்பி விட்டார். ஆனால் அவரின் கணவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். […]
