காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்ட வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாங்குப்பம் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரவேல் என்ற மகன் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக குமரவேல் அருணாதேவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் அருணா தேவியின் பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர். […]
