அமெரிக்காவில் மனைவியின் ஆயுள் காப்பீடு தொகைக்கு ஆசைப்பட்டு கணவர் செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Susan Winters (வயது 48) என்ற பெண் வழக்கறிஞர் கடந்த 2015-ஆம் ஆண்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணின் உடலில் வலியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்தும், உறைதலை தடுக்க பயன்படுத்தப்படும் மருந்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் Susan அந்த மருந்துகளை குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் சொல்லப்பட்டது. இந்த நிலையில் […]
