ஒரிசாவை சேர்ந்த பெண் மற்றும் அவரின் குழந்தைகளை மாவட்ட கலெக்டர் அவரின் கணவரிடம் ஒப்படைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரிசாவை சேர்ந்த கர்ப்பிணியான பிளாச்சி என்ற பெண்ணை ஒருபெண் குழந்தையுடன் சுயநினைவு இல்லாத நிலையில் சமூகநலத் துறையினர் மீட்டுள்ளனர். அந்தப் பெண்ணை சமூகநலத் துறையினர் மீண்டான்பட்டியில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து அவருக்கு சிகிச்சையும், மனநல மருத்துவர்களால் ஆலோசனைகள் அளித்து வந்துள்ளனர். இதனையடுத்து பிளாச்சியின் குழந்தையான அங்கீதாவை அடைக்கலாபுரத்தில் உள்ள குழந்தைகள் […]
