கணவன் மற்றும் மாமியார் தாக்கி இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிலந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை அடுத்துள்ள ஏ. மேட்டுப்பட்டி பகுதியில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் நாகை நல்லூரில் வசித்து வரும் முருகவேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த தம்பதியினருக்கு 1 வதியில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. […]
