உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கணவன்-மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிப்பாளையம் பகுதியில் பெரியசாமி, அவரது மனைவி காளியம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் உடல்நலத்தில் சற்றும் முன்னேற்றம் ஏற்படாததால் கணவன்-மனைவி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தன்று பெரியசாமி, காளியம்மாள் இருவரும் வீட்டை விட்டு வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் […]
