கணவனும் மனைவியும் சேர்ந்து தொழிலாளியை கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் கூலித் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் பல வருடங்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டுக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணியில் கருப்பண்ணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அசோகனும் அவரது மனைவி செல்வியும் கருப்பண்ணனை குடிநீர் குழாயை அமைக்க விடாமல் தடுத்துள்ளனர். இதனால் […]
