விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.வி.பி.என்.எஸ் தெருவில் கார்த்திகேயராஜா அருணா மகா ஸ்ரீ தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் அருணா போலீசருக்கு எழுதிய கடிதத்தில், 5 லட்ச ரூபாய் கடன் தருவதாக கூறி மகாராஜா என்பவர் எங்களிடம் இருந்து முன்பணம் வாங்கினார். ஆனால் அவர் முன்பணத்தை திருப்பி தராமலும், கடனை தராமலும் எங்களை ஏமாற்றிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகாராஜாவை பிடித்து விசாரித்தனர். […]
