தூத்துக்குடி மாவட்டத்தில் நிவேஷ் எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, பூந்தமல்லியில் உள்ள முனி கிருஷ்ணா பகுதியில் வெங்கடேஷ் மற்றும் பாண்டிலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கரையாச்சாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான விநியோக உரிமையை தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொடுப்பதாக கூறினார்கள். இதனால் 25 லட்ச ரூபாயை நான் […]
