கணவன் மற்றும் மனைவியை அரிவாளால் வெட்டியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோட்டத்தில் சுந்தரம் மற்றும் அவரது மனைவி மோகனம்மாள் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த வடிவேல் ‘எனது சொத்தை பிரித்து தர முடியுமா? […]
