மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னநாகலூர் பகுதியில் பழனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கனிமொழி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது பழனியாண்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அருகிலுள்ள இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் கனிமொழியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
