கணவனை கிரிக்கெட் பேட்டால் தாக்கி கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராஜா ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜாராம் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 21 – ஆம் தேதி அன்று ராஜாராம் மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டை போட்டுக் […]
