கள்ளக்குறிச்சியில் குடித்துவிட்டு வந்த கணவனை, மனைவியே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த தம்பதிகள் மருதமுத்து – சித்ரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மருதமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் மருதமுத்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த சித்ரா அருகில் இருந்த சுத்தியலை எடுத்து மருதமுத்துவின் தலையில் ஓங்கி அடித்து விட்டு அவரது உறவினர் […]
