மது போதையில் மகனை தாக்கிய தொழிலாளியை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொற்கை கிராமத்தில் தொழிலாளியான மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் மகாதேவன் வீட்டிற்கு அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மகாதேவன் மனைவியிடம் பணம் வாங்கி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். […]
