மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பொட்டல்களம் கிராமத்தில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு பவுன்தாய் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து பவுன்தாய் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளது. இதுகுறித்து எந்த தகவலும் சின்னதுரைக்கு தெரிவிக்கவில்லை. இதனால் […]
