கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடைகள் மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திற்கு திருக்கோவிலூரில் இருந்து ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து திருவெண்ணைநல்லூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்கிருந்த கடைகள் மீது பேருந்து மோதியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த விபத்தில் பிளஸ் 2 மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் […]
