Categories
தேசிய செய்திகள்

புனே பேருந்தில் திடீர் தீ விபத்து…27 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்… பெரும் பரபரப்பு…!!!!!

மும்பையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை அருகே பிவாண்டியில் உள்ள கிராமத்திலிருந்து புனே மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பீமா சங்கர் கோவிலுக்கு 27 பயணிகள் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது பீமா சங்கர் கோடகான் சாலையில் ஷிண்டோவாடி அருகே  மற்றொரு பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்து புகை வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அதன் பின் அவசர அவசரமாக பேருந்து நிறுத்தப்பட்டு அதிலிருந்து பயணிகள் கீழே இறக்கி […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக இருக்கும் முதியவர்களுக்கு…. உதவிக்கரம் நீட்டும் சென்னை காவல்துறை….!!

கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில் புதிய நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அது மட்டுமில்லாமல் பல மருத்துவமனைகளில் இடம் இல்லாத காரணத்தினால் நோய்த்தொற்று உறுதியான பலரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் படி மருத்துவமனை தெரிவிக்கின்றது. இதனால் பலர் தங்களது வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடனே கால் பண்ணுங்க… 24 மணி நேரமும் இயங்கும்… மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கொரோனா தொற்றுக்கான சந்தேகங்களை 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியாளர்  தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும்  கொரொனா தொற்றுக்கான சந்தேகங்களை குறித்து 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் ரத்னா, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி ஆகியோர் இணைந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் செயல்படும்… தொற்று பரவலை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரவலை கண்காணிக்க 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தடுப்பிற்க்கான கட்டுப்பாட்டு அறை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேற்று முன்தினம் அந்த அறையை ஆய்வு செய்தார். மேலும் கட்டுப்பாட்டு அறையில் பராமரிப்பு பதிவேடுகளையும் பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது, தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு இதை வழங்கவில்லையா..? இங்க புகார் குடுங்க… தொழிலாளர் உதவி கமிஷனர் தகவல்..!!

சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்களின் மீது தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வசதியாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், கட்டுமான நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகிய தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கவில்லை என்றால் அந்த நிறுவனங்கள் மீது குற்றவியல் […]

Categories

Tech |