சீனாவில் சில மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே சீனாவில் தான் கொரோனா வைரஸ் முதலில் தோன்றியது. அதன் பின்பு ஒவ்வொரு நாடாக பரவத்தொடங்கி உலகம் முழுவதும் தீவிரமடைந்தது. தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த திணறி கொண்டிருக்கையில், சீனா கொரோனா பரவலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. குவாங்டாங் என்ற மாகாணத்தில் 10 நபர்களுக்கு சாதாரண கொரோனா தொற்றும், […]
