ஜெர்மனி அதிபரின் உதவியாளர் கொரோனா ஊரடங்கை நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார். ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கலின் உதவியாளரான Helge Braun, நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிட்டால் ஜெர்மனி நீண்டகாலமாக ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இப்போது ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் இன்னும் அதிக காலத்திற்கு அனைத்துக் கட்டுப்பாடுகளும் அமல்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை போல ஜெர்மனியும் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த போராடி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். […]
