Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பரவல் வேகம் அதிகரித்து வருவதால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்களில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கல் போன்றவற்றில் பல கட்டுப்பாடுகள் என பல்வேறு விதிமுறைகள் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் குறைந்தது – அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த  ஊரடங்கானது  ஜூன்-7 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதனால் தொற்று ஓரளவிற்கு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி நிலவரப்படி 12, […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து  அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதன் பிடியில் சிக்கியிருந்த தலைநகர் சென்னை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் நோயின் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசாங்கம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பட்டு பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1456 நோய் கட்டுப்பட்டு பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டப்பட்டு பகுதிகள் 1089லிருந்து 1456ஆக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 104 ஆக உயர்வு… மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 50 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதில், குறிப்பாக ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட 11 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்வு… மாநகராட்சி அறிவிப்பு..!!

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 90 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தண்டையார்பேட்டையில் 38, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 9, அண்ணாநகர் மண்டலத்தில் 8 என கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 360ஆக இருந்தது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1,380 பேருக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மொத்தம் 360… மாநகராட்சி தகவல்..!!

சென்னையில் 360 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 78, கோடம்பாக்கம் மண்டலத்தில் 73, திருவிக நகரில் 54 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதி அல்லது தெருக்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியானால் அந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக மொத்தம் 316 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன: தமிழக அரசு

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக மொத்தம் 316 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், தமிழகத்தில் 16 மாவட்டங்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், நேற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 712ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 712 அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட புதிய தெருக்களில் பாதிப்புகள் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 14 நாட்களாக நோய் தொற்று கண்டறியாத 46 தனிப்படுத்திய பகுதிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையானது 701ல் இருந்து 655ஆக குறைந்தது. ஆனால் கடந்த 2 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த 46 பகுதிகளுக்கு விலக்கு ….!! 

சென்னையில் கொரோனா பாதித்து தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த 46 பகுதிகளுக்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் கொரோனா பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்த 46 கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாததால் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்திருக்கிறது. இதுகுறித்த விவரங்களை ட்விட் மூலம் மாநகராட்சி விளக்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 701ஆக அதிகரிப்பு – சென்னை மாநகராட்சி!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 701ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 783 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690ஆக உயர்வு!!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 587ல் இருந்து 690 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 513 ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வகையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 455ஆக இருந்த நிலையில் தற்போது 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் 101 தெருக்கள், கோடம்பாக்கம் 22 தெருக்கள், திருவிக 94 தெருக்கள், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்வு..!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த வார துவக்கத்தில் 357 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்வு..!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 233 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் – மாவட்ட வாரியாக அரசிதழ் வெளியீடு!

தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த 2ம் தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 711 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக மாவட்ட வாரியாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. மத்திய […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – 77, கோடம்பாக்கம் – 97, […]

Categories

Tech |