உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்று கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருவதாக அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி பவுசி பற்றி தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் வேகமாக பரவ கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தடுப்பூசி போடாதவர்கள் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். இதனால் மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இந்த எச்சரிக்கை இந்தியாவிற்கும் பொருந்தும். எனவே மக்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் என்று சுகாதாரத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
